ஜூலை 6, 2008 ஆல் premtheva

அதிகாரிப் பூனை!
ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு பூனைதான் அதிகாரி. நம்புங்க! சும்மா கதையெல்லாம் விடேல்லை நான். நீங்க செல்லமா வளர்க்கிற பூனைதான் ரயில் நிலைய அதிகாரி.
தேவைப்பட்டால் பூனையைக்கூட உதவிக்கு அழைத்துக் கொள்ளுவோம் என்கிறார்கள் ஜப்பானியர்கள். அது மட்டுமல்ல அதனைச் செயற்படுத்தியும் காட்டியுள்ளார்கள். மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு நகரத்தில் மூடப்பட்டுக்கிடக்கும் ஒரு ரயில் நிலையத்திற்கு அதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) தாமா (Tama) என்கிற 9 வயதான பெண் பூனை.
தொடர்ந்து படிக்கவும் »
General இல் பதிவிடப்பட்டது | மறுமொழி இல்லை »
ஜூலை 6, 2008 ஆல் premtheva

நளினி, பிரியங்கா, நடேசன்
இந்த வார குமுதம் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் பேட்டி வெளிவந்துள்ளது. ஒரு கேள்விக்கான பதிலில், “பிரியங்கா எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் மனிதாபிமான நோக்கோடு சென்று பார்த்திருக்கிறார் என கருதுகிறேன்” எனச் சொல்லி இருக்கிறார் அவர். ஆனால், உண்மை அதுதானா?
தொடர்ந்து படிக்கவும் »
Politics இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Indian, Nalinimurugan, P.Nadesan, Pireyankavathera, Sri Lanka | Comments Off
ஏப்ரல் 25, 2008 ஆல் premtheva
எல்லாம் இருந்தாலும் வாழ்க்கையைச் சலித்துக்கொள்ளும் மனிதர்களுக்கு நெத்தியடி இந்த 25 வயது இளைஞர். பிறக்கும் போதே கைகளும் இல்லை கால்களும் இல்லை இவருக்கு. அதனால் என்ன எனக்குக் கவலையும் இல்லை என்பதுதான் அவரது தாரக மந்திரம். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1982 டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி பிறந்த இந்த இளைஞர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களை அவர்களது அவநம்பிக்கைகளில் இருந்து மீட்டெடுத்து வாழ ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான பேச்சாளர்.
தொடர்ந்து படிக்கவும் »
General இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது மெல்பேர்ன், வாழ்க்கை, life withoutl imbs, Nick Vujicic | மறுமொழி இல்லை »
ஏப்ரல் 4, 2008 ஆல் premtheva
காமதேனுக்களும் அனுமார்களும் எம்முடன் கூடவே கூடிக் கூலாவி குதூகலித்திருக்கும் ஒரு காலம் விரைவில் வந்துவிடும். மனிதத் திசுக்களையும் விலங்கின் கருமுட்டையையும் சேர்த்து கலப்புக் கரு ஒன்றை உருவாக்கி விட்டிருக்கிறார்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். அதுதான் என்னை இதிகாசகாலத்திற்கு இழுத்துச் சென்று மனித்தலை மிருக உடம்பு அல்லது மிருகத்தலை மனித உடம்பு ‘மிருமனிதர்களுடன்’ உலாவவிட்டது.
தொடர்ந்து படிக்கவும் »
Tech இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
மார்ச் 29, 2008 ஆல் premtheva
கணினி பயன்படுத்தும் எல்லோருமே எப்போதாவது ஒரு தடவை ட்ரோஜன் (Trojan), ட்ரோஜன் ஹோர்ஸ் (Trojan horse) என்ற வைரஸ் பெயாரைப் பார்த்திருப்பீர்கள். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்? வைரஸை உருவாக்கியவரின் பெயரா? இல்லை, யாராவது அந்தப் பெயரில் வைரஸ் புரோகிறாம் எழுதினார்களா?
ட்ரோஜன் ஹோர்ஸ் என்பது கிரேக்க காவியம் கணினிக்குத் தந்த பரிசு. ஹோமர் என்ற கிரேக்க மகாகவி (நம்ம ஊர் கம்பன் போன்றவர்) படைத்த ‘இலியட்’ என்ற காவியம்தான் இந்தப் பெயருக்கு மூலம். சில வைரஸ்கள் செயல்படும் முறையை ஒத்த அவற்றுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
தொடர்ந்து படிக்கவும் »
Tech இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Achilles, அக்கிலிஸ், கணினி, ஹோமர், Homer, Trojan horse, Troy | 1 மறுமொழி »
பெப்ரவரி 29, 2008 ஆல் premtheva

தேங்காய் எண்ணெய்யில் போயிங் விமானம் ஒன்று வெற்றிகரமாகத் தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்தது. அண்மையில் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்த சுற்றுச்சூழல் தொடர்பான செய்தி இது.
வேர்ஜினியா அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் (உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று) இந்தப் பரீட்சார்த்தப் பறப்பை நடத்தியது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஒன்று லண்டனில் இருந்து பறந்தது. அதிக தூரமில்லாத ஆம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
தொடர்ந்து படிக்கவும் »
General இல் பதிவிடப்பட்டது | மறுமொழி இல்லை »
ஜனவரி 31, 2008 ஆல் premtheva
என்னுடைய பதிவுகளில் ஒன்றில் செக்ஸ் (Sex) என்ற வார்தையைப் போட்டாலும் போட்டேன். அதைத் தேடி வரும் விட்டில்பூச்சிகளின் எண்ணிக்கையைப் பார்த்து மலைத்துப் போய்விட்டேன். நாளாந்தம் என் வலைப்பூவைத் தேடி வருவோரில் கணிசமானவர்கள் இந்த வார்தையைப் பின்தொடர்ந்து அதாவது தேடுபொறிகளில் இந்த வார்தையைத் தேடி வருபவர்களாகவே இருக்கிறார்கள்.
அந்த மூன்றெழுத்து வார்தைக்கு உள்ள மதிப்பு அறிந்ததுதான் என்றாலும் வலைப் பதிவுகளிலும் அதற்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை நினைத்தால் ஒருபக்கம் பரிதாபமாகவும் மறுபக்கம் சிரிப்பாகவும் இருக்கிறது. ஏனெனில் அவர்களை ஈர்த்து வரும் அந்த வார்தையைத் தவிர என்பதிவில் வேறு எதுவும் இல்லை. அவர்கள் நிச்சயம் ஏமாந்துதான் போகிறார்கள். ஆனாலும் பாருங்கள் நாளாக நாளாக அதைத் தேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவே இல்லை. வலைப்பூக்களைப் பிரபலப்படுத்த இந்த மாதிரியும் சில விசயங்களைச் செய்யலாம் போலிக்கிறது. எல்லாம் ‘அதற்கே’ வெளிச்சம்.
இங்கே அதற்காகத்தான் மீண்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளேன் என்று தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.
General இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
ஜனவரி 31, 2008 ஆல் premtheva
இறுவட்டு அல்லது குறுந்தகடுகளைப் (CD) பயன்படுத்தும் கார் ஸ்ரியோ பிளேயர்களை car stereo receiver இனி மறந்து விடுங்கள். சிடிக்களைப் காவுவதும் அவற்றைப் பாதுகாத்து வைத்திருப்பதும் சிரமம் பிடித்த வேலையாக இருந்தால் இனி அது அவ்வாறு இருக்கப் போவதில்லை. உங்களுக்காகவே வந்துவிட்டது மெமரி கார்டுகளைப் (SD/MMC memory card) பயன்படுத்தும் கார் ஸ்ரீரியோ பிளேயர்கள். ஜேர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று இந்த புதிய பிளேயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் சிடி போடுவதற்கான இடமே இல்லை. மெமரி கார்டுகளை உள்நுழைக்கக் கூடிய இடம் மட்டுமே இருக்கிறது. MP3, WMA போன்ற பைல்களில் உள்ள பாடல்களை இதில் நீங்கள் கேட்டு மகிழலாம். உங்களிடம் உள்ள மெமரி கார்டின் கொள்ளவிற்கேற்ப எவ்வளவு பாடல்களை வேண்டுமானாலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து படிக்கவும் »
Tech இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Blaupunkt Melbourne SD27, CD, SD/MMC memory card | 1 மறுமொழி »
ஜனவரி 29, 2008 ஆல் premtheva

கொஞ்சம் பனி கொட்டினாலே இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிடும் நம் மத்தியில் இந்த மனிதர் முழு பனிக்கட்டிகளுக்குள்ளே ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்திருந்து சாதனை படைத்திருக்கிறார். பனி மனிதன் (’The Iceman) என்று செல்லமாக அழைக்கப்படும் விம் ஹொவ் (Wim Hof) நெதர்லாந்து நாட்டுக்காரர். ஜனவரி 26ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ரொபின் அரும்பொருட்காட்சியகத்தின் முன்னால் தன்னுடைய முன்னைய சாதனையை முறியடித்து ஒரு மணி 12 நிமிடங்கள் பனிக்கட்டிகளுக்குள்ளேயே அமர்ந்திருந்திருக்கிறார் இந்த மனிதர்.
தொடர்ந்து படிக்கவும் »
General இல் பதிவிடப்பட்டது | மறுமொழி இல்லை »
நவம்பர் 12, 2007 ஆல் premtheva
கேரளா நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது ரயில். அருகே அமர்ந்திருக்கும் இளைஞருடன் பேச்சுக் கொடுக்கிறார் ஒரு முதியவர்.
“என்னப்பா பண்ணிட்டிருக்க?”
“செஸ் ஆடிட்டிருக்கேங்க”
“நா அதக் கேக்கல. நீ என்ன தொழில் பண்ணின்டிருக்கேன்னேன்.”
“இல்லீங்க நான் முழு நேரமா செஸ் தான் ஆடின்டிருக்கேன். என்னோட தொழிலே அதுதாங்க”
தொடர்ந்து படிக்கவும் »
Features இல் பதிவிடப்பட்டது | மறுமொழி இல்லை »