இன்றைய கணனி உலகில் Postal Codes எனப்படும் தபால் குறியீட்டு இலக்கங்கள் மிகவும் அவசியமானது. இணையத்தில் நீங்கள் எந்தப் பதிவை மேற்கொண்டாலும் (குறிப்பாக இலவச பொருட்களைப் பெற) இந்தக் குறியீட்டு இலக்கங்களை கட்டாயம் கேட்பார்கள். மேற்கு நாடுகள் மற்றும் கொழும்பு போன்ற பெரிய நகரங் களில் மட்டுமே இத்தகைய இலக்கங்களை வைத்திருப்பார்கள் என்றே நானும் இது நாள் வரை எண்ணி இருந்தேன்.
இன்று கூகிள் இணையத்தில் ஒரு பதிவை மேற்கொள்வதற்தாக எனக்கு யாழ்ப்பாணத்தின் Postal Codes தேவைப்பட்டது. பல தடவைகள் அந்தப் பகுதியை வெற்றிடமாக விட்டு விண்ணப்பத்தை அனுப்பிய போதும் அது பூரணமாகவே இல்லை. திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தது. நண்பர்களிடமும் கேட்டுப்பார்த்தேன் அவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவர்களும் பத்திரிகையாளர்கள் வேறு.
இணையத்தில் தேடிப்பார்ப்போம் என்ற எண்ணம் திடீரென தற்செயலாகத் தோன்றியது. தேடியபோது ஆச்சரியம். இலங்கையின் அனைத்து நகரங்களுக்குமான அனைத்து Postal Codes வந்து விரிந்தன. அதில் யாழ்ப்பாணத்திற்கான இலக்கம் 40000 என்று இருந்து. இனிமேல் இணையத்தில் உங்கள் ஊரின் Postal Codes கேட்டால் உடனே கொடுத்து விடுங்கள். இங்கே சில தமிழ் ஊர்களின், நகர்களின் Postal Codes கீழே தருகின்றேன்.
மன்னார் : 41000
முல்லைத்தீவு : 42000
வவுனியா: 43000
அம்பாறை : 32000
அட்டாளைச்சேனை : 32350
அக்கரைப்பற்று : 32400
ஏறாவூர் : 30300
களுவாஞ்சிக்குடி : 30200
மாங்கேணி : 30442
வாழைச்சேனை : 30400
சீனன்குடா : 31050
ஈச்சிலம்பற்றை : 31236
கந்தளாய் : 31300
கண்ணியா : 31032
சம்பூர் : 31216
தம்பலகாமம்: 31046
இன்னும் எவ்வளவோ தமிழ் ஊர்களின் Postal Codes உள்ளன. தேவையானவர்கள் இணையத்தை நாடுங்கள்.




Its useful information for every Tamil citizen.
usefull infor. welldone.