பட்டினியால் வாடும் யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி பழ நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கின்றார். கடந்த மூன்று நாள்களாக அவர் பட்டினி கிடக்கின்றார். பொலிஸாரின் இடைஞ்சல்களுக்கும் அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கும் மத்தியில் தனது கொள்கையில் அவர் தீவிரமாக இருக்கிறார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு தனிப்பட விடுத்த கோரிக்கையையும் புறக்கணித்துவிட்டு தான் கொண்ட முடிவில் உறுதியாக இருக்கும் நெடுமாறனுக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்.இன உணர்வு ஒன்றால் மட்டுமே ஈழத் தமிழர்களுடன் பிணைக்கப்பட்டவர் நெடுமாறன். அவர் கேட்பதெல்லாம் யாழ்ப்பாண மக்களுக்காக தாம் தமிழகத்தில் சேகரித்த பொருட்களை செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு மூலம் அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான். மனிதாபிமான நோக்கம் கருதிய இந்தச் செயலை அரசியல் கருதி மறுக்கிறது இந்திய அரசு. அதற்கு யாழ்ப்பாணத் தமிழர்களைவிடத் தன் அண்டை நாட்டு அரசுடனான நல்லுறவு மிக முக்கியமானது. ஆனால் அதை எதிர்த்து தனது கோரிக்கையில் விடாப்பிடியாக இருக்கும் நெடுமாறனின் இனஉணர்வுக்கு முன் ஒவ்வொரு ஈழத்தமிழனும் சிரம் தாழ்த்த வேண்டும்.
8/11 (அமெரிக்காவின் 9/11 மாதிரி நான்காம் கட்ட ஈழப்போரில் 8/11 என்பது மிகமுக்கியமானது. அதாவது ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி இரவு நடந்த மோதலுடனேயே யாழ்ப்பாணத்திற்கான ஏ9 வீதி முகமாலையில் மூடப்பட்டது.) அன்று யாழ்ப்பாணத்திற்கான ஏ9 பாதை மூடப்பட்டு மக்கள் பட்டினிச் சாவின் விளிம்பு வரை சென்ற போது அவர்களுக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கக்கூட அந்த மக்களின் வாக்குகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகியவர்களில் எவரும் முன்வரவில்லை. அப்படி இருக்கும்போது இன்னொரு நாட்டில் இருந்தபடி இன உணர்வுக்காக, கஷ்டப்படும் தமிழ் மக்களுக்காக தன்னுயிரை ஈகம் செய்யத் துணிந்த பழ நெடுமாறனின் தியாகத்திற்கு ஈடுஇல்லை. அவரது தன்னலமற்ற கோரிக்கைக்கு இந்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.
Technorati: Tamil, Nedumaran, Tamilnadu




It is a very good post. Yah! i also thing this way.
நெடுமாறன் இன உணர்வினை வெளிப்படுத்துகிறார் என்பதற்காக ஒரு ஊடகவியலாளன் தலை தாழ்த்துவது அவ்வளவு அழகல்ல.
நான் அனுப்பிய கருத்து முழுமையாக பிரசுரிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதும் ஒரு ஊடகவியலாளனுக்கு அழகல்ல.