என்னுடைய பதிவுகளில் ஒன்றில் செக்ஸ் (Sex) என்ற வார்தையைப் போட்டாலும் போட்டேன். அதைத் தேடி வரும் விட்டில்பூச்சிகளின் எண்ணிக்கையைப் பார்த்து மலைத்துப் போய்விட்டேன். நாளாந்தம் என் வலைப்பூவைத் தேடி வருவோரில் கணிசமானவர்கள் இந்த வார்தையைப் பின்தொடர்ந்து அதாவது தேடுபொறிகளில் இந்த வார்தையைத் தேடி வருபவர்களாகவே இருக்கிறார்கள்.
அந்த மூன்றெழுத்து வார்தைக்கு உள்ள மதிப்பு அறிந்ததுதான் என்றாலும் வலைப் பதிவுகளிலும் அதற்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை நினைத்தால் ஒருபக்கம் பரிதாபமாகவும் மறுபக்கம் சிரிப்பாகவும் இருக்கிறது. ஏனெனில் அவர்களை ஈர்த்து [...]
ஜனவரி, 2008 க்கான தொகுப்பு
மூன்றெழுத்து தந்திரம்
Posted in General on ஜனவரி 31, 2008 | 2 மறுமொழிகள் »
புதிய அறிமுகம்
Posted in Tech, குறிச்சொல் இடப்பட்டது Blaupunkt Melbourne SD27, CD, SD/MMC memory card on ஜனவரி 31, 2008 | 1 மறுமொழி »
இறுவட்டு அல்லது குறுந்தகடுகளைப் (CD) பயன்படுத்தும் கார் ஸ்ரியோ பிளேயர்களை car stereo receiver இனி மறந்து விடுங்கள். சிடிக்களைப் காவுவதும் அவற்றைப் பாதுகாத்து வைத்திருப்பதும் சிரமம் பிடித்த வேலையாக இருந்தால் இனி அது அவ்வாறு இருக்கப் போவதில்லை. உங்களுக்காகவே வந்துவிட்டது மெமரி கார்டுகளைப் (SD/MMC memory card) பயன்படுத்தும் கார் ஸ்ரீரியோ பிளேயர்கள். ஜேர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று இந்த புதிய பிளேயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் சிடி போடுவதற்கான இடமே இல்லை. மெமரி கார்டுகளை உள்நுழைக்கக் [...]
பனி(!) மனிதன்
Posted in General on ஜனவரி 29, 2008 | Leave a Comment »
கொஞ்சம் பனி கொட்டினாலே இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிடும் நம் மத்தியில் இந்த மனிதர் முழு பனிக்கட்டிகளுக்குள்ளே ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்திருந்து சாதனை படைத்திருக்கிறார். பனி மனிதன் (‘The Iceman) என்று செல்லமாக அழைக்கப்படும் விம் ஹொவ் (Wim Hof) நெதர்லாந்து நாட்டுக்காரர். ஜனவரி 26ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ரொபின் அரும்பொருட்காட்சியகத்தின் முன்னால் தன்னுடைய முன்னைய சாதனையை முறியடித்து ஒரு மணி 12 நிமிடங்கள் பனிக்கட்டிகளுக்குள்ளேயே அமர்ந்திருந்திருக்கிறார் இந்த மனிதர்.



