இறுவட்டு அல்லது குறுந்தகடுகளைப் (CD) பயன்படுத்தும் கார் ஸ்ரியோ பிளேயர்களை car stereo receiver இனி மறந்து விடுங்கள். சிடிக்களைப் காவுவதும் அவற்றைப் பாதுகாத்து வைத்திருப்பதும் சிரமம் பிடித்த வேலையாக இருந்தால் இனி அது அவ்வாறு இருக்கப் போவதில்லை. உங்களுக்காகவே வந்துவிட்டது மெமரி கார்டுகளைப் (SD/MMC memory card) பயன்படுத்தும் கார் ஸ்ரீரியோ பிளேயர்கள். ஜேர்மன் நாட்டு நிறுவனம் ஒன்று இந்த புதிய பிளேயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் சிடி போடுவதற்கான இடமே இல்லை. மெமரி கார்டுகளை உள்நுழைக்கக் கூடிய இடம் மட்டுமே இருக்கிறது. MP3, WMA போன்ற பைல்களில் உள்ள பாடல்களை இதில் நீங்கள் கேட்டு மகிழலாம். உங்களிடம் உள்ள மெமரி கார்டின் கொள்ளவிற்கேற்ப எவ்வளவு பாடல்களை வேண்டுமானாலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
வரவர சிடிக்களை மக்கள் விரும்புவது குறைந்து கொண்டே வருவதால் இந்த புதிய தயாரிப்பிற்குத் தாங்கள் தாவிவிட்டனர் என்று இதனை அறிமுகப்படுத்திய நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்திருக்கிறார். இணையத்தினது பாவனை அதிகரித்த பின்னர் பாடல்களை அதிலிருந்தே வாங்கிவிடுகிறார்கள் அல்லது பதிவிறக்கம் செய்து விடுகிறார்கள். ஐபோட் மற்றும் எம்பி3 பிளேயர்களின் பாவனையும் வேகமாக ஆக்கிரமித்துச் செல்கிறது. இதனால் புதிய அறிமுத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கை.
எம்பி3 பிளேயர்களை பொருத்தி இந்த புதிய ஸ்ரியோவில் பாடல்களைக் கேட்கலாம் என்பது இதன் மற்றுமோர் விசேடம். கைப்பேசிகளுடன் இணைத்தும் பயன்படுத்த முடியுமாம் இதனை. 3.5எம்எம் ஆடியோ பிளக்குக்குப் பொருந்தக்கூடிய எதனையும் இதனுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். இப்போதைக்கு புதிய Blaupunkt Melbourne SD27வின் விலை 160 டாலர்கள்.
காசட்டுக்கள் போய் சிடி வந்தது. இப்போது அதுவும் போய் மெமரி கார்டுகளின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்தாகி விட்டது. இன்னும் கொஞ்சக் காலத்தில் வெறும் நூலிலை சாதனங்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தொழில்நுட்பத்தின் வேகம் அப்படி.





Hi…….
Im using this messege in my tv programme. Thank u.
Add some thing more like this..