என்னுடைய பதிவுகளில் ஒன்றில் செக்ஸ் (Sex) என்ற வார்தையைப் போட்டாலும் போட்டேன். அதைத் தேடி வரும் விட்டில்பூச்சிகளின் எண்ணிக்கையைப் பார்த்து மலைத்துப் போய்விட்டேன். நாளாந்தம் என் வலைப்பூவைத் தேடி வருவோரில் கணிசமானவர்கள் இந்த வார்தையைப் பின்தொடர்ந்து அதாவது தேடுபொறிகளில் இந்த வார்தையைத் தேடி வருபவர்களாகவே இருக்கிறார்கள்.
அந்த மூன்றெழுத்து வார்தைக்கு உள்ள மதிப்பு அறிந்ததுதான் என்றாலும் வலைப் பதிவுகளிலும் அதற்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை நினைத்தால் ஒருபக்கம் பரிதாபமாகவும் மறுபக்கம் சிரிப்பாகவும் இருக்கிறது. ஏனெனில் அவர்களை ஈர்த்து வரும் அந்த வார்தையைத் தவிர என்பதிவில் வேறு எதுவும் இல்லை. அவர்கள் நிச்சயம் ஏமாந்துதான் போகிறார்கள். ஆனாலும் பாருங்கள் நாளாக நாளாக அதைத் தேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவே இல்லை. வலைப்பூக்களைப் பிரபலப்படுத்த இந்த மாதிரியும் சில விசயங்களைச் செய்யலாம் போலிக்கிறது. எல்லாம் ‘அதற்கே’ வெளிச்சம்.
இங்கே அதற்காகத்தான் மீண்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளேன் என்று தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.




hi annaa,
eppadijana nalla vidajankal unkal valaithalathil thaan paarka kidaikirathu… nallam… eanakku unkal thalathil pidiotha vidajam யாழ்ப்பாணம் : 40000 neenkal ethil sonnathakavalai vaithu pala vidajankal arinthan pirijosanamaakavum erukku.. ennum viththijaasamaaka seiunkal annaaaaaaaa…
-piraba-
hai anna , ean web http://www.newsjaffna.wordpress.com