எல்லாம் இருந்தாலும் வாழ்க்கையைச் சலித்துக்கொள்ளும் மனிதர்களுக்கு நெத்தியடி இந்த 25 வயது இளைஞர். பிறக்கும் போதே கைகளும் இல்லை கால்களும் இல்லை இவருக்கு. அதனால் என்ன எனக்குக் கவலையும் இல்லை என்பதுதான் அவரது தாரக மந்திரம். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1982 டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி பிறந்த இந்த இளைஞர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களை அவர்களது அவநம்பிக்கைகளில் இருந்து மீட்டெடுத்து வாழ ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான பேச்சாளர்.
அவர் பிறந்தபோது நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருப்பார் என்று அவரது பெற்றோரே நினைத்திருக்கவில்லை. ஆனால் எல்லோருடைய எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கிவிட்டு திடகாத்திரமான இளைஞராக வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் இன்று. கைகளையும் கால்களையும் மற்றவர்களைப் போன்று தனக்குக் கடவுள் தரவில்லையே என்று புலம்பிக்கொண்டிராமல், தன்னைக் கடவுள் இப்படிப் படைத்ததே மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகத்தான் என்று நினைப்பதும் அதன்படி நடப்பதும்தான் அவரது பலம்.
சின்னச் சின்ன துயரங்களுக்கெல்லாம் கடவுள் மேல் பழிபோட்டு அவரைத் திட்டும் நம்மைப் போன்றவர்களுக்கு நிக் வியுசிக் (Nick Vujicic) ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. தன் வாழ்க்கையை உதாரணமாகக் கொண்டு நம்பிக்கை வழிகாட்டுப் வழிகாட்டிப் புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார் இப்போது.
http://www.lifewithoutlimbs.org என்ற இணையத் தளத்தில் அவர் பற்றிய முழு விவரங்களையும் பார்வையிடலாம்.
Nick Vujicic இன் வாழக்கை வரலாறு படங்களில் காண இங்கே சொடுக்குங்கள்






