ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு பூனைதான் அதிகாரி. நம்புங்க! சும்மா கதையெல்லாம் விடேல்லை நான். நீங்க செல்லமா வளர்க்கிற பூனைதான் ரயில் நிலைய அதிகாரி.
தேவைப்பட்டால் பூனையைக்கூட உதவிக்கு அழைத்துக் கொள்ளுவோம் என்கிறார்கள் ஜப்பானியர்கள். அது மட்டுமல்ல அதனைச் செயற்படுத்தியும் காட்டியுள்ளார்கள். மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு நகரத்தில் மூடப்பட்டுக்கிடக்கும் ஒரு ரயில் நிலையத்திற்கு அதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) தாமா (Tama) என்கிற 9 வயதான பெண் பூனை.
இந்த பகுதியில் உள்ள 14.3 கிலோ மீற்றர் தூரத்திற்குள் 10 ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. கொஞ்ச நாள்களிலேயே இந்த ரயில் நிலையங்களால் கிடைக்கும் வருமானம் குறைந்து போனது. அதனால் வருமானம் மிகக் குறைவாக இருந்த ஒரு நிலையத்தை மூடிவிட்டார்கள். 2006 ஏப்ரலில் இது நடந்தது. அதன் பின்னர் என்ன நினைத்தார்களோ 2007 ஜனவரியில் தாமாவை (நிஜப் பூனை) ரயில் நிலைய அதிகாரியாக திடீர் என்று நியமித்தார்கள். அதன் பின்னர் அந்தப் பகுதி ரயில் நிலையங்களின் வருமானம் சடுதியாக உயர்ந்து விட்டதாம்.
தாமாவின் நியமனத்தின் பின்னர் ரயில் நிலையத்திற்கு வருமானம் குவிகிறது என்கிறார்கள் அதிகாரிகள். அதற்கு முன்னைய ஆண்டைவிட இந்த ஆண்டு 17 வீதம் வருமானம் அதிகரிபு கிடைத்துள்ளது. எல்லாம் தாமா வந்த அதிர்~;டம்தானாம். இதனால் மகிழ்ச்சியடைந்த நிறுவனம் தாமாவை சிறந்த அதிகாரி (சூப்பர் ஸ்ரேசன் மாஸ்டர்.) பதவிக்கு உயர்த்தியுள்ளது. தாமாவுக்கான சம்பளமும் அந்த நிறுவனத்தால் கனதியாகத் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவள் இப்போது நிறுவனத்தின் ஐந்தாவது அதியுயர் பதவியில் இருக்கிறாள் என்று தமா~hகக் கூறுகிறார் நிறுவனத்தின் பேச்சாளர். நிறுவனத்தின் அதிகாரிக்கான தொப்பி ஒன்றும் பட்டயம் ஒன்றும் தாமாவுக்கு வழக்கப்பட்டிருக்கின்றன.
தாமா வேறு ஒரு ஊரில் பிறந்தவள். தற்போது அவள் பணியாற்றும் ரயில் நிலையத்தில் முன்னர் பணியாற்றிய தூய்மைத் தொழிலாளி ஒருவர் அவளை ஆசையாக அங்கு எடுத்து வந்தார். எனினும் பின்னர் அவள் சரிவரக் கவனிக்கப்படவில்லை. ஆதனால் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு சின்ன கடைக்காரரிடம் ஒண்டிக்கொண்டாள் தாமா. அவர்தான் அவளைப் போ~pத்து வளர்த்து ஆளாக்கினார். இப்போதும் அவள் அவருடன்தான் தங்கியிருக்கிறாள்.
ஓவ்வொரு நாள் காலையிலும் கடைக்காரார் எழுந்து காலை 9 மணிக்கு தாமாவுக்கு அவளது கடைமை நேரம் வந்து விட்டது என்பதை நினைவுபடுத்துவார். தாமா எழுந்து தனியாகவே ரயில் நிலையம் வந்துவிடுவாள். மாலை 5 மணிவரைக்கும் அங்கு பணியில் இருப்பாள். ஞாயிற்றுக்கிழமைகளில் அவளுக்கு ஓய்வு நாள். ரயில் நிலையத்தில் முன்னர் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டு வந்த இடத்தை இப்போது தாமாவுக்கான பிரத்தியேகமான இருப்பிடமாக ரயில் நிறுவனம் மாற்றியமைத்துக் கொடுத்திருக்கிறது.
தன்னைப் பார்த்து வாழ்த்துவதற்காக ரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளைப் பார்வையிட்டுக்கொள்வதுதான் இப்போது தாமாவின் வேலை. பார்வையாளர்கள் தொந்தரவு இல்லாமல் ஒரு மறைப்பான கழிபறையையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் தாமாவுக்கு.
அவளது நியமனத்திற்குப் பின்னர், அந்தப் பகுதி ரயில் நிலையங்களை பயன்படுத்திய பயணிகள் எண்ணிக்கை 2.1 மில்லியன் என்கிறது கணக்கெடுப்பு. இது முன்னைய 12 மாதங்களைவிடவும் 10 வீத அதிகரிப்பாம்.
தாமாவைப் பற்றி விரைவிலேயே பிரெஞ் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஆவணப்படம் தயாரிக்கவுள்ளது.





