Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘General’ பகுப்புக்கான தொகுப்பு

ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு பூனைதான் அதிகாரி. நம்புங்க! சும்மா கதையெல்லாம் விடேல்லை நான். நீங்க செல்லமா வளர்க்கிற பூனைதான் ரயில் நிலைய அதிகாரி.
தேவைப்பட்டால் பூனையைக்கூட உதவிக்கு அழைத்துக் கொள்ளுவோம் என்கிறார்கள் ஜப்பானியர்கள். அது மட்டுமல்ல அதனைச் செயற்படுத்தியும் காட்டியுள்ளார்கள். மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு நகரத்தில் மூடப்பட்டுக்கிடக்கும் ஒரு ரயில் நிலையத்திற்கு அதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) தாமா (Tama) என்கிற 9 வயதான பெண் பூனை.

முழு பதிவையும் வாசிக்க »

எல்லாம் இருந்தாலும் வாழ்க்கையைச் சலித்துக்கொள்ளும் மனிதர்களுக்கு நெத்தியடி இந்த 25 வயது இளைஞர். பிறக்கும் போதே கைகளும் இல்லை கால்களும் இல்லை இவருக்கு. அதனால் என்ன எனக்குக் கவலையும் இல்லை என்பதுதான் அவரது தாரக மந்திரம். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1982 டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி பிறந்த இந்த இளைஞர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களை அவர்களது அவநம்பிக்கைகளில் இருந்து மீட்டெடுத்து வாழ ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான பேச்சாளர்.

முழு பதிவையும் வாசிக்க »

தேங்காய் எண்ணெய்யில் போயிங் விமானம் ஒன்று வெற்றிகரமாகத் தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்தது. அண்மையில் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்த சுற்றுச்சூழல் தொடர்பான செய்தி இது.
வேர்ஜினியா அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் (உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று) இந்தப் பரீட்சார்த்தப் பறப்பை நடத்தியது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஒன்று லண்டனில் இருந்து பறந்தது. அதிக தூரமில்லாத ஆம்ஸ்ரடாம் விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

முழு பதிவையும் வாசிக்க »

என்னுடைய பதிவுகளில் ஒன்றில் செக்ஸ் (Sex) என்ற வார்தையைப் போட்டாலும் போட்டேன். அதைத் தேடி வரும் விட்டில்பூச்சிகளின் எண்ணிக்கையைப் பார்த்து மலைத்துப் போய்விட்டேன். நாளாந்தம் என் வலைப்பூவைத் தேடி வருவோரில் கணிசமானவர்கள் இந்த வார்தையைப் பின்தொடர்ந்து அதாவது தேடுபொறிகளில் இந்த வார்தையைத் தேடி வருபவர்களாகவே இருக்கிறார்கள்.
அந்த மூன்றெழுத்து வார்தைக்கு உள்ள மதிப்பு அறிந்ததுதான் என்றாலும் வலைப் பதிவுகளிலும் அதற்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை நினைத்தால் ஒருபக்கம் பரிதாபமாகவும் மறுபக்கம் சிரிப்பாகவும் இருக்கிறது. ஏனெனில் அவர்களை ஈர்த்து [...]

முழு பதிவையும் வாசிக்க »

பனி(!) மனிதன்

கொஞ்சம் பனி கொட்டினாலே இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிடும் நம் மத்தியில் இந்த மனிதர் முழு பனிக்கட்டிகளுக்குள்ளே ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்திருந்து சாதனை படைத்திருக்கிறார். பனி மனிதன் (‘The Iceman) என்று செல்லமாக அழைக்கப்படும் விம் ஹொவ் (Wim Hof) நெதர்லாந்து நாட்டுக்காரர். ஜனவரி 26ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ரொபின் அரும்பொருட்காட்சியகத்தின் முன்னால் தன்னுடைய முன்னைய சாதனையை முறியடித்து ஒரு மணி 12 நிமிடங்கள் பனிக்கட்டிகளுக்குள்ளேயே அமர்ந்திருந்திருக்கிறார் இந்த மனிதர்.

முழு பதிவையும் வாசிக்க »

பொழுது போகாமல் இணையத்தில் கிளறிக்கொண் டிருந்தேன். யாழ்ப்பாணம் பற்றி கிண்டிக்கொண்டிருந்த போது ஒரு தளம் என்னை மிகவும் கவர்ந்தது. யாழ்ப்பாணத்து மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள ஒருவரது இணையத் தளம் அது. நெதர்லாந்தில் இருக்கும் ரெமீஜியஸ் கனகராஜா என்பவருக்கு உரியது அத்தளம். அவர் மன்னர் பரம்பரையின் உண்மையான வாரிசா இல்லையா என்பதெல்லாம் இங்கு என் விவாதத்திற்குரிய விடயமல்ல. எழுத்தாளர் கலாநிதி குணராசா ஒருமுறை இப்படி மன்னர் வாரிசைப் பற்றி எழுதி செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டார் [...]

முழு பதிவையும் வாசிக்க »

‘ஈயத்’ தமிழர்கள்

எனக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சில நண்பர்கள் இருக்கிறார்கள். 24 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். துடிதுடிப்பும் சுறுசுறுப்பும் உள்ளவர்கள் என்பதுடன் படிப்பில் கெட்டிகளும் கூட. விடயம் என்ன வென்றால் அவர்களில் ஒருவர் நேற்று என்னிடத்தில் கேட்டார் ”எங்கள் ஈயத் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள்” என்று. அவர் வாய்தவறி ”ஈயத் தமிழர்கள்” உச்சரிக்கவில்லை. உண்மையிலேயே அவருக்கு அப்படித்தான் தமிழ் தெரிந்திருந்தது. மற்றொருவர் என்னிடத்தில் கேட்டார் ‘சிலோன்’ என்பது ‘சிறீ லங்கா’விற்குள் இருக்கும் ஒரு இடமா? என்று.

முழு பதிவையும் வாசிக்க »

யாழ்ப்பாணம் : 40000

இன்றைய கணனி உலகில் Postal Codes எனப்படும் தபால் குறியீட்டு இலக்கங்கள் மிகவும் அவசியமானது. இணையத்தில் நீங்கள் எந்தப் பதிவை மேற்கொண்டாலும் (குறிப்பாக இலவச பொருட்களைப் பெற) இந்தக் குறியீட்டு இலக்கங்களை கட்டாயம் கேட்பார்கள். மேற்கு நாடுகள் மற்றும் கொழும்பு போன்ற பெரிய நகரங் களில் மட்டுமே இத்தகைய இலக்கங்களை வைத்திருப்பார்கள் என்றே நானும் இது நாள் வரை எண்ணி இருந்தேன். 

முழு பதிவையும் வாசிக்க »