Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Politics’ பகுப்புக்கான தொகுப்பு

உண்மை!?

இந்த வார குமுதம் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் பேட்டி வெளிவந்துள்ளது. ஒரு கேள்விக்கான பதிலில், “பிரியங்கா எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் மனிதாபிமான நோக்கோடு சென்று பார்த்திருக்கிறார் என கருதுகிறேன்” எனச் சொல்லி இருக்கிறார் அவர். ஆனால், உண்மை அதுதானா?

முழு பதிவையும் வாசிக்க »

பட்டினியால் வாடும் யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி பழ நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கின்றார். கடந்த மூன்று நாள்களாக அவர் பட்டினி கிடக்கின்றார். பொலிஸாரின் இடைஞ்சல்களுக்கும் அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கும் மத்தியில் தனது கொள்கையில் அவர் தீவிரமாக இருக்கிறார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு தனிப்பட விடுத்த கோரிக்கையையும் புறக்கணித்துவிட்டு தான் கொண்ட முடிவில் உறுதியாக இருக்கும் நெடுமாறனுக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்.

முழு பதிவையும் வாசிக்க »