செப்டம்பர் 16, 2007 premtheva ஆல்

பொழுது போகாமல் இணையத்தில் கிளறிக்கொண் டிருந்தேன். யாழ்ப்பாணம் பற்றி கிண்டிக்கொண்டிருந்த போது ஒரு தளம் என்னை மிகவும் கவர்ந்தது. யாழ்ப்பாணத்து மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள ஒருவரது இணையத் தளம் அது. நெதர்லாந்தில் இருக்கும் ரெமீஜியஸ் கனகராஜா என்பவருக்கு உரியது அத்தளம். அவர் மன்னர் பரம்பரையின் உண்மையான வாரிசா இல்லையா என்பதெல்லாம் இங்கு என் விவாதத்திற்குரிய விடயமல்ல. எழுத்தாளர் கலாநிதி குணராசா ஒருமுறை இப்படி மன்னர் வாரிசைப் பற்றி எழுதி செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டார் என்பது என் பழைய ஞாபகங்களில் ஒன்று. நான் சொல்ல வந்தது அதுவல்ல.
தொடர்ந்து படிக்கவும் »
General இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்டம்பர் 15, 2007 premtheva ஆல்
எனக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சில நண்பர்கள் இருக்கிறார்கள். 24 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். துடிதுடிப்பும் சுறுசுறுப்பும் உள்ளவர்கள் என்பதுடன் படிப்பில் கெட்டிகளும் கூட. விடயம் என்ன வென்றால் அவர்களில் ஒருவர் நேற்று என்னிடத்தில் கேட்டார் ”எங்கள் ஈயத் தமிழ் மக்கள் எப்படி இருக்கிறார்கள்” என்று. அவர் வாய்தவறி ”ஈயத் தமிழர்கள்” உச்சரிக்கவில்லை. உண்மையிலேயே அவருக்கு அப்படித்தான் தமிழ் தெரிந்திருந்தது. மற்றொருவர் என்னிடத்தில் கேட்டார் ‘சிலோன்’ என்பது ‘சிறீ லங்கா’விற்குள் இருக்கும் ஒரு இடமா? என்று.
தொடர்ந்து படிக்கவும் »
General இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
செப்டம்பர் 14, 2007 premtheva ஆல்
பட்டினியால் வாடும் யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி பழ நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கின்றார். கடந்த மூன்று நாள்களாக அவர் பட்டினி கிடக்கின்றார். பொலிஸாரின் இடைஞ்சல்களுக்கும் அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கும் மத்தியில் தனது கொள்கையில் அவர் தீவிரமாக இருக்கிறார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு தனிப்பட விடுத்த கோரிக்கையையும் புறக்கணித்துவிட்டு தான் கொண்ட முடிவில் உறுதியாக இருக்கும் நெடுமாறனுக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள். தொடர்ந்து படிக்கவும் »
Politics இல் பதிவிடப்பட்டது | 3 மறுமொழிகள் »
செப்டம்பர் 13, 2007 premtheva ஆல்

இன்றைய கணனி உலகில் Postal Codes எனப்படும் தபால் குறியீட்டு இலக்கங்கள் மிகவும் அவசியமானது. இணையத்தில் நீங்கள் எந்தப் பதிவை மேற்கொண்டாலும் (குறிப்பாக இலவச பொருட்களைப் பெற) இந்தக் குறியீட்டு இலக்கங்களை கட்டாயம் கேட்பார்கள். மேற்கு நாடுகள் மற்றும் கொழும்பு போன்ற பெரிய நகரங் களில் மட்டுமே இத்தகைய இலக்கங்களை வைத்திருப்பார்கள் என்றே நானும் இது நாள் வரை எண்ணி இருந்தேன். தொடர்ந்து படிக்கவும் »
General இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
செப்டம்பர் 8, 2007 premtheva ஆல்

கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி எடுத்த படங் களே கவிழ்ந்து போய்விடுகின்ற தமிழ் சினிமாவில் வெறும் 2 லட்சம் ரூபாவில் எடுக்கப்பட்ட ஒரு 90 நிமிட படம் திரைக்கு வராமலேயே சக்கை போடு போடுகின் றது என்றால் நம்ப முடிகின்றதா? எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தகவலியல் (Visual communi-cation), மின்னணு ஊடகவியல் (Electronic media) துறைகள் இணைந்து இதனைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.
தொடர்ந்து படிக்கவும் »
Cinema இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
செப்டம்பர் 7, 2007 premtheva ஆல்
அருகே நெருங்க முடியாதளவிற்குத் தூக்கியடிக்கும் துர்நாற்றம். அந்த நகரத்தின் முழுக் குப்பை களும் அங்கேதான் கொட்டப்படுகின்றன. சில மணித் துளிகள் அப்பகுதியில் நின்றாலேயே தொற்று நோய்க்கு ஆளாகிவிடுவோமோ என்று அஞ்சி நடுங்கவைக்குமளவிற்குப் பயங்கரமான சூழல். அதற்கு மத்தியில் வெய்யில் மழை எதற்கும் ஈடுகொடுக்க முடியாததொரு குடிசை, அதற்குள் ஒரு வாழ்க்கை. கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
தொடர்ந்து படிக்கவும் »
Features இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்டம்பர் 6, 2007 premtheva ஆல்
அந்தப் பையன் தலையை வலதும் இடதுமாக தீவிரமாக ஆட்டி தனது தாயுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு சுவாரஸியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. அவனது மூடிய வலது கையில் இருந்த ரூபா நோட்டை தாய் பறித்து விடுவாளோ என்ற பயத்தில் விரல்களுக்கு இடையில் இறுக்கப் பற்றிப் பிடித்திருந்தான். சாதாரணமாக நின்றுகொண்டிருந்தாள் தாய். ஆனாலும் பையனின் கையிலிருந்த காசைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மென்மையான அணுகுமுறைதான் தெரிந்தது. ஆனால், அவன் அந்தக் காசை தன்னிடம் தந்துவிடவேண்டும் என்ற ஆவல் தெரிந்தது. தொடர்ந்து படிக்கவும் »
Short storys இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »